
நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா, மகள் சவுந்தர்யாவுடன் சென்னையில் ஓட்டு போட வந்தார். வரிசையில் நின்று அவர்கள் ஓட்டளித்தனர். அதன் பின்னர் ஓட்டுப் பதிவு மையத்தில் இருந்து வெளியே வந்த ரஜினிகாந்தை நிருபர்கள், கேமரா மேன்கள் சுற்றி வளைத்தனர். வழக்கம்போலவே ரஜினியிடன் அரசியல் குறித்த கேள்விகளை நிருபர்கள் எழுப்பினார்கள். ரஜினியும் வழக்கம்போலவே தனக்கே உரிய ட்ரேட் மார்க் சிரிப்புடன் நிருபர்கள்களின் கேள்விக்கு ஒரே பதிலையே திரும்ப திரும்ப சொல்லிவிட்டு தேங் யூ என்று கூறிக்கொண்டே நகர்ந்தார். அவர் கூறுகையில், ஜனநாயகத்தை காப்பாற்ற அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். நான் ஜனநாயக கடமையை ஆற்ற வந்திருக்கிறேன், என்றார்.
dinamalar
0 comments:
Post a Comment