Friday, May 15, 2009

உயிரிலே என்

உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி
காணாமல் போனாய் இது காதல் சாபமா?
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும் ஓடமா?
(உயிரிலே..)

கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை
கன்களிலே தூவிவிட்டாய் மண்துகளை
இந்த சோகம் இங்கு சுகமானது
அது வரமாக நீ தந்தது
நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்
என் துணையாக வருகின்றது
ஆறாத காயங்கள் என் வாழ்க்கை பாடமா?
இனி தீயை வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா?
(உயிரிலே..)

கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்
காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே
இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா?
நான் விழுந்தாலும் மீண்டும் எழ
இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே
என்னை விட்டாயே எங்கே செல்ல?
ஆன் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி
அது தெருவின் ஓரம் நிறுத்திவைக்கும்
பழுதான தேரடி
(உயிரிலே..)

0 comments:

Post a Comment