Monday, May 4, 2009

TAMIL JOKES

ஒருவர் : அவர் ஒரு மஹா கஞ்ச பிரபு!
மற்றவர் : அப்படியா..! எப்படி சொல்றீங்க?
ஒருவர் : தீயணைப்பு நிலையத்துக்குக் கூட மிஸ்டு கால்தான் குடுக்குறார்னா பாத்துக்குங்களேன்!

திருடன் : (சிறுவனிடம்) தம்பி! உனக்கு மிட்டாய் தருகிறேன். உங்க வீட்ல நகைகளை எங்கே வைப்பாங்க சொல்லு..
சிறுவன் : அடகுக் கடையிலே!

ஜோதிடர் : உங்க ஜாதகப்படி, இப்ப பணத்துக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஒரு மூன்று மாதம் பல்ல கடிச்சிக்குங்க… அப்புறமா உங்களுக்கு கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.
வந்தவர் : எது பல்லா?

நோயாளி : என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க.
டாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க! சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னு எழுதியிருக்கேன்.

0 comments:

Post a Comment